Uthiram

5,000

Category: Product ID: 7804

Description

இந்த நட்சத்திரக்காரர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்..உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.இக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோவில் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.உத்திரம் நட்சத்திர கோவில் இடையாற்றுமங்கலம் ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் வழிபடவேண்டிய தெய்வத் கோவில்களுள் மிக முக்கியமானது.இடையாற்றுமங்கலம் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர் ஆலயம். மிகவும் சுப சக்திகள் நிறைந்த நட்சத்திரங்களில் ஒன்று உத்திர நட்சத்திரம். திருமணம், பூணூல் கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம், போன்ற அனைத்து சுப காரியங்களுக்கும் ஏற்ற மங்களகரமான நட்சத்திரம் ஆகும்.