Hastham

5,000

Category: Product ID: 7800

Description

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர் கிருபா கூபாரேச்வரர்.ஆனால் அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது.முனிவர்களும், மகான்களும்,சித்தர்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக கூறப்படுகிறது. எனவே அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது கைகளாலேயே வடை, லட்டு,கொழுக்கட்டை,ரவாலட்டு, போளி ஆகிய பதார்த்தங்கள் செய்து, அஸ்த நட்சத்திர நாளில் இங்கு தானம் செய்வதுடன், கரங்கள் கூப்பியபடி கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப்பெறலாம். திங்கள், புதன் கிழமைகளில் கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.