Sathayam

5,000

Category: Product ID: 7781

Description

இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81ம் வயதில், இக்கோவிலில் உழவாரப் பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர கோவிலாக விளங்குகிறது.அப்பருக்கு தனி கோயில் உள்ளது. சித்திரை சதயத்தை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் பகவானிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடத்தப்படுகிறது.அப்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய வணங்குவது மனதை உருக்கும் காட்சியாக இருக்கும். அக்னிபுரீஸ்வரரின் மனைவியாக அம்பாள் கருந்தார்குழலி அருள்பாலிக்கிறாள். அக்னிபுரீஸ்வரர் நீங்கலாக, வர்த்தமானேஸ்வரர் சன்னதியும், அவரது மனைவியாக மனோன்மணி அம்மையும் அருள்